தேசிய கல்வி நிறுவகம்

Skip Navigation Links

பணிப்பாளர் நாயகம்

 

 

dg

கலாநிதி (திருமதி) ஜயந்தி குணசேகர தனது விஞ்ஞானமானிக் கற்கை நெறியை பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்தும் பின்னர் புள்ளிவிபரவியலில் பட்டப்பின் டிப்ளோமாவை ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்திலிருந்தும் மற்றும் கல்வியும் உளவியல் கணிப்பீட்டுக்குமான பட்டப்பின் டிப்ளோமாவை கொழும்பு பல்கலைக் கழகத்திலிருந்தும் பெற்றுக் கொண்டார். மேலும் அவர் தனது பட்டப்பின் டிப்ளோமாவை தேசிய கல்வி நிறுவனத்திலிருந்து தொகுதியில் அதி உயர் நிலையில் தஙகப்பதக்கத்தை வெற்றி கொண்டு பெற்றுக்கொண்டார்.

 

அவர் உலக வங்கி புலமைப்பரிசிலை வெற்றி கொண்டு லண்டன் பல்கலைக் கழகத்தின் கல்வி நிறுவனத்தில் கல்வித்திட்டமிடலும் பொருளாதாரமும் பாடநெறியில் முதுமானியைத் தொடர்ந்தார். அத்துடன் 2004 ஆண்டில் தனது கலாநிதிக்கான ஆய்வுக்கட்டுரைக்கு சிறப்பு விருதினை பிரித்தானிய கல்வித் தலைமைத்துவ முகாமை,நிர்வாக, சங்கத்திலிருந்து(BELMAS) பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்தார்.

 

கலாநிதி குணசேகர அவரது தொழிலை ஒரு கணித ஆசிரியையாக ஆரம்பித்தார். பின்னர் அவர் வாழ்க்கத்தரக் கல்விக்கான புதிய கலைத்திட்டத்தினை விருத்தி செய்த UNDP UNESCOவின் பொதுக் கல்வியில் தர முன்னேற்ற திட்டத்தில் திட்டஅதிகாரியாக இணைந்தார்.

 

அவர் இலங்கை கல்வி நிர்வாகசேவையில் இணைந்ததோடு பின்பு தே. க .நி நிறுவனத்தின் கல்வி அதிகாரியின் முதற் தொகுதியுடன் கணிதத் திணைக்களத்தின் திட்டஅதிகாரியாக விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் பிரதான திட்டஅதிகாரியாக தொழில் நுட்ப கல்வித் திணைக்களத்துக்கு உயர்த்தப்பட்டார்.பின்னர் அவர் திட்டமிடல் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதோடு மீண்டும் ஆய்வு. திட்டமிடல் மற்றும் ஆசிரியர் கல்வி பீடத்துக்கு உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இறுதியாக அவர் தே. க .நி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

 

தே. க .நி நிறுவனத்தில் 26 வருட சேவையை பூர்த்தி செய்த பின்பு 2013 இல் தேசிய கல்வி ஆணைக்குழுவில் உதவி தலைமை அதிகாரியாக இணைந்து, 2016 ம் ஆண்டில் தே. க .நி நிறுவனத்தில் பணிப்பாளர் நாயகமாகப் பதவி ஏற்றார்.

 


© 2019 - Department of IT, National Institute of Education, P.O. Box 21, High Level Road, Maharagama, Sri Lanka